Type Here to Get Search Results !

எல்லை நிலவரம் குறித்தும் ஆய்வுக்குப்பின், பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் விளக்கமளித்துள்ளார்.

As PM Modi rejigs cabinet committees, Amit Shah gets seat in all 8 ...

லடாக் மோதல் சம்பவம் குறித்தும், எல்லை நிலவரம் குறித்தும் ஆய்வுக்குப்பின், பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் விளக்கமளித்துள்ளார்.

இந்தியாவில், லடாக்கின் கல்வான் பகுதியில், ஐந்து வாரங்களாக, இந்திய - சீன படைகள் முகாமிட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் மாலையில், திடீரென மோதல் ஏற்பட்டது. சீன ராணுவம் நடத்திய அட்டூழியத் தாக்குதலில், நம் வீரர்கள், 20 பேர் வீர மரணம் அடைந்தனர். எல்லையில் உள்ள நிலையை மாற்றியமைக்க முயன்ற சீன ராணுவத்துக்கு, நம் ராணுவத்தினர் பதிலடி கொடுத்தனர். இந்த தாக்குதல்களில், 43 சீன வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம், இரு நாடுகளுக்கு இடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இபிரச்னை குறித்து, முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், முப்படைகளின் தளபதிகளுடன், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், நேற்று ஆலோசனை நடத்தினார். வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் இக்கூட்டத்தில் பங்கேற்றார். அதன்பின், எல்லையில் நடந்த சம்பவங்கள் மற்றும் அங்குள்ள நிலைமை குறித்தும், பிரதமர் நரேந்திர மோடியிடம், ராஜ்நாத் சிங் விளக்கினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.