முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

Dina AthibAn
0


 கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மிரட்டல் விடுத்த சிறுவன் பெயர் விலாசத்தை தெரிவித்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தற்போது கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. அவர் வசிக்கும் கிரீன்வேஸ் இல்லத்தில் தனியாக பாதுகாப்பு அளிக்கும் காவலர்கள் அலுவலகம் அமைந்துள்ளது.
இந்நிலையில் இன்று மாலை சுமார் 4.55 மணி அளவில் காவல் கட்டுப்பாட்டறை 100-க்கு ஒரு போன் கால் ஒன்று வந்துள்ளது. காவலர் ராக்குமதி போனை எடுத்துள்ளார். மறுமுனையில் பேசிய சிறுவன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துவிட்டு தொடர்பைத் துண்டித்துவிட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெண் காவலர் ராக்குமதி உடனடியாக போன் செய்த எண்ணை பார்த்தபோது அது செல்போன் எண் என தெரியவந்தது. உடனடியாக மீண்டும் அதே எண்ணுக்கு போன் செய்த ராக்குமதி அந்த சிறுவனிடம் நீ யார் என்று கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த சிறுவன் தனது பெயர் அஸ்வின், காசிபாளையம், ஈரோடு என்று தெரிவித்துள்ளார்.
உடனடியாக மேற்கண்ட தகவலை காவலர் ராக்குமதி தனது மேலதிகாரிகளுக்கு தெரிவிக்க உடனடியாக முதல்வர் பாதுகாப்புப் பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வெடிகுண்டு நிபுணர் பிரிவு ஆய்வாளர் கணேசன் தலைமையில், வெடிகுண்டு திறனறியும் மோப்ப நாய் ஸ்டார் கொண்டு வரப்பட்டு முதல்வர் வீட்டில் சோதனை நடந்து வருகிறது.
போன் செய்த சிறுவன் இருக்கும் ஊருக்கு அந்த மாவட்ட போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையே சிறுவனின் தாயார் தனது மகன் தவறுதலாக போன் செய்துவிட்டான் என்று கூறியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!