யானை கொல்லப்பட்ட சம்பவம்: கேரளாவிடம் மத்திய அரசு அறிக்கை கேட்பு

Dina AthibAn
0
latest tamil news

கேரளாவில் மலப்புரத்தில் அன்னாசியில் பட்டாசு வைத்து யானை கொல்லப்பட்ட சம்பவம் குறித்து மத்திய அரசு கேரள அரசிடம் விரிவான அறிக்கை தரும்படி கேட்டுள்ளது.

கேரள மாநிலம் மலப்புரத்தி்ல் காட்டில் உணவு தேடி வந்த கர்ப்பிணி யானைக்கு அன்னாசி பழத்தில் பட்டாசுகளை மறைத்து வைத்து மர்மநபர்கள் அளித்துள்ளனர். அதை யானை தின்ற போது பட்டாசு வெடித்ததில் யானைக்கு வாயில் பலத்த காயம் ஏற்பட்டது. காயத்துடன் சுற்றி வந்த யானை ஒரு கட்டத்தில் பரிதாபமாக உயிரிழந்தது.

இது குறித்து மத்திய வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்ததாவது, ' கேரளாவில் பழத்திற்குள் பட்டாசு வைத்து கர்ப்பிணி யானையின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். இச்சம்பவம் குறித்து கேரள அரசு விரிவான அறிக்கை வழங்க வேண்டும்' இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!