
டில்லி மாநில பா.ஜ.க தலைவராக இருந்த மனோஜ் திவாரி மாற்றப்பட்டு, ஆதேஷ் குமார் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார்.
போஜ்புரி மொழி நடிகரும் பாடகருமான மனோஜ் திவாரி கடந்த 2016 முதல் மாநில தலைவராக வகித்து வந்தார். டில்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ.க ஆட்சி பிடிக்க முடியாததை தொடர்ந்து மனோஜ் திவாரி, தனது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தார். ஆனால், அதனை ஏற்க பா.ஜ., மேலிடம் மறுத்துவிட்டது.
இந்நிலையில், அவர் மாற்றப்பட்டு, ஆதேஷ் குமார் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார். இவர், வடக்கு டில்லி மாநகராட்சி மேயர் பதவி வகித்துள்ளார்.
மேலும், சத்தீஸ்கர் மாநில தலைவராக விஷ்ணு தியோ சாய் மற்றும் மணிப்பூர் மாநில தலைவராக திகேந்திர சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை பா.ஜ., தலைவர் ஜெ.பி.நட்டா பிறப்பித்துள்ளார்.

AthibAn Tv