Type Here to Get Search Results !

கொரோனா குறித்து பொது மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்

நிதி ஆயோக் கணக்கீடு தவறானது ...

கொரோனா குறித்து பொது மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மதுரை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:கொரோனா குறித்து பொது மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

மதுரையில் கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றுக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளிக்க அனைவரும் முன்வர வேண்டும். இறப்பு விகித்தை கண்காணிக்க வல்லுநர்கள் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வீரியம் மிக்க மருந்துகள் வாங்கப்பட்டுள்ளது. இதனால் இறப்பு விகிதம் குறையும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.