
மத்திய பிரதேச பா.ஜ. மூத்த தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா திடீரென தனது டுவிட்டர் சமூக வலைதளத்தில் பா.ஜ. கட்சி பெயரை நீக்கியுள்ளார்.
மத்திய பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்., வென்றால் ஜோதிராதித்யா சிந்தியா முதல்வராவார் என்று பெரிதும் பேசப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் மூத்த தலைவர் கமல்நாத் முதல்வராக்கப்பட்டார். இதனால் அதிருப்தியடைந்த ஜோதிராதித்யா, தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜ.வில் இணைந்தார்.
இதையடுத்து நடந்த அரசியல் மாற்றத்தால் அங்கு பா.ஜ. ஆட்சி ஏற்பட்டது. முதல்வராக சிவராஜ்சிங் சவுகான் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் சமீப காலமாக முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கும் ஜோதிராதித்யாவுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தனது அதிருப்தியை காட்ட , தனது டுவிட்டர் சமூக வலைதளத்தில், தன் முகவரியில், பா.ஜ. பெயரை நீக்கிவிட்டு, பொது சேவகன் மற்றும் கிரிக்கெட் ஆர்வலர் என, குறிப்பிட்டுள்ளார் ஜோதிராதித்யா. இதற்கு முன்பும், இதுபோன்று காங். மீது தன் அதிருப்தியை சமூக வலைதளத்தில் அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


AthibAn Tv