
இந்திய- ஆஸ்திரேலிய உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்த மாநாடு டில்லியில் நடத்த திட்டமிட்டப்பட்டிருந்தது. இதில் கலந்து கொள்ள ஸ்காட் மோரிசன் இந்தியா வர விருந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் இரு நாட்டு பிரதமர்களும் வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று ஆலோசனை நடத்துகின்றனர். இதில் இரு தரப்பு பரஸ்பரம் நட்புறவு , பாதுகாப்பு, வர்த்தகம், கடல்சார் ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும், உலகில் பரவியுள்ள கொடிய வைரசான கொரேனா தொற்று குறித்தும் ஆலோசனை நடத்துகின்றனர்.
இரு நாடுகளுக்கிடையே உறவு மேலும் செழிப்பாக வளர மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைள் குறித்தும் விவாதிக்கின்றனர்.
முன்னதாக இரு நாட்டு பிரதமர்களும் கடந்த இரண்டு ஆண்டுகளில் 4 முறை நேருக்கு நேர் சந்தித்து பேசியுள்ளனர். தற்போது வீடியோ கான்பரன்சிங் வாயிலாக இருவரும் சந்தித்து பேச உள்ளதாக ஆஸி. வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

AthibAn Tv