
லடாக்கில் சீன வீரர்கள் தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்ததை தொடர்ந்து, வரும் வெள்ளிக்கிழமை அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
மாலை 5 மணியளவில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நடக்கும் இந்த கூட்டத்தில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். எல்லையில் தற்போது நிலவும் சூழ்நிலை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
காஷ்மீர் மாநிலம், லடாக்கில் கல்வான் பகுதியில் இருந்து வெளியேறும் போது, சீன வீரர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பிலும் பாதிப்பு உண்டு என்ற போதிலும் எத்தனை பேர் என்பதை அந்நாடு வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. 45 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மோதலை தொடர்ந்து பதற்றத்தை குறைக்கும் வகையில், இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

AthibAn Tv