பிரதமர் நரேந்திர மோடி, இன்று (ஜூன் 30) மாலை, 4:00 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார்

Dina AthibAn
0
பாகிஸ்தான் மக்களுக்கு குடியுரிமை ...

பிரதமர் நரேந்திர மோடி, இன்று (ஜூன் 30) மாலை, 4:00 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார்.

நாட்டில், 'கொரோனா' வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 5.50 லட்சத்தை நெருங்கியுள்ளது. வைரஸ் பரவலை தடுக்க, ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மறுபுறம், இந்திய - சீன எல்லைப் பகுதியில், பதற்றமான சூழல் நிலவி வருகிறது. சமீபத்தில், சீன ராணுவம் நடத்திய தாக்குதலில், 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர்.

இது, நாடு முழுதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இப்படி இரண்டு பிரச்னைகளை இந்தியா எதிர்கொண்டு வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, இன்று மாலை, 4:00 மணிக்கு, நாட்டு மக்களிடம் உரையாற்ற இருக்கிறார். இந்த தகவலை, பிரதமர் அலுவலகம், 'டுவிட்டர்' மூலம் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!