சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடிக்கு நிவாரண சலுகை

Dina AthibAn
0
ப.சிதம்பரத்திடமிருந்து ராகுல் ...

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடிக்கு நிவாரண சலுகைகள் வழங்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக பதவியேற்று ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில், பிரதமர் இல்லத்தில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில், கொரோனா தடுப்பு நடவடிக்கை, நிவாரண நடவடிக்கைகள், பொருளாதார மீட்பு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர்கள் நரேந்திரசிங் தோமர் மற்றும் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்கனவே அறிவித்த சலுகைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் 14 விவசாய பொருட்களுக்கான கொள்முதல் விலை அதிகரிப்பு. பல்வேறு பயிர்களுக்கான கொள்முதல் விலை 50 சதவீதம் முதல் 83 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் வரை வங்கிக்கடன் வழங்கவும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கான கடனுதவியில் 7 சதவீதம் வரை வட்டி தள்ளுபடி செய்யப்படும். இதன் மூலம் 50 லட்சம் சாலையோர வியாபாரிகள் பயனடைவர்.

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடிக்கு நிவாரண சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 2 லட்சம் சிறு, குறு தொழில் முனைவோர் பயனடைவர். 250 கோடி ரூபாய் வரை வியாபாரம் உள்ள நிறுவனங்களுக்கும், 50 கோடி ரூபாய் வரை முதலீடு உள்ள நிறுவனங்களுக்கும், சிறு தொழில்களுக்கான சலுகைகள் அளிக்கப்படும். சிறு, குறு தொழில் துறையில் மத்திய அரசு வழங்கும் சலுகைகள் மூலம் ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

முக்கிய அமைச்சரவை முடிவுகள்
  • 2 லட்சம் எம்.எஸ்.எம்.இ.களுக்கு ரூ .20,000 கோடி வழங்கப்படும். MSME வரையறை மேலும் மாற்றப்பட்டுள்ளது
  • 14 காரீப் பயிர்களுக்கு எம்.எஸ்.பி.க்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கிறது; சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைத்தபடி விவசாயிகள் செலவை விட 50-83 பிசி அதிகம் பெற வேண்டும்.
  • இந்திய அரசு விவசாயிகளுக்கு 7% வட்டிக்கு கடன் வழங்குகிறது. மே 31 வரை தளர்வு வழங்கப்பட்டது. பிரதமர் இந்த தேதியை ஆகஸ்ட் 31 வரை நீட்டித்துள்ளார், சரியான நேரத்தில் பணம் செலுத்துபவர்களுக்கு 4% மானியம் கிடைக்கும். இந்த திட்டத்தில் 6.65 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் உள்ளனர், மீதமுள்ள அனைவரும் சேர்க்கப்படுவார்கள்
  •  ரூ .50,000 கோடி நிதி தயாரிக்கப்படும். 15% பங்குகளை அரசு வாங்க வேண்டும். MSME பங்குச் சந்தைக்குச் செல்லும், இதன் மூலம் மக்கள் முதலீடு செய்வார்கள், மேலும் MSME வளர உதவும்
  • தெரு விற்பனையாளர்களுக்கு ரூ .10,000 வழங்கப்படும். பி.எம். தெரு விற்பனையாளர் ஆத்மிர்பன் நிதி என பெயரிடப்பட்ட திட்டம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!