Type Here to Get Search Results !

இந்தியாவில் கொரோனா பலி 16,475 ஆக அதிகரிப்பு



 நாட்டில், ஒரே நாளில், 19 ஆயிரத்து, 459 பேருக்கு, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 5 லட்சத்து 48 ஆயிரத்து 318 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 380 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 16 ஆயிரத்து 475 ஆகவும் அதிகரித்துள்ளது.

இது குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம், வெளியிட்டுள்ள அறிக்கை: ஒரே நாளில், நாடு முழுதும், 19 ஆயிரத்து, 459 பேருக்கு, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ஐந்து லட்சத்து, 48 ஆயிரத்து 859 ஆக உயர்ந்துள்ளது. 2 லட்சத்து, 10 ஆயிரத்து 120 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 லட்சத்து, 21 ஆயிரத்து 723 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று ஒரே நாளில் 380 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து பலி எண்ணிக்கை 16 ஆயிரத்து 475 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மாநில வாரியாக பாதிப்பு விவரம்

பாதிப்பில், மஹா., முதலிடத்தில் உள்ளது. 1 லட்சத்து, 64 ஆயிரத்து 626 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 ஆயிரத்து 429பேர் மரணமடைந்துள்ளனர்.

டில்லியில் 83 ஆயிரத்து 077 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 ஆயிரத்து 623 பேர் மரணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் 82 ஆயிரத்து 275 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்து 79 பேர் மரணமடைந்துள்ளனர்.

குஜராத்தில் 31 ஆயிரத்து 320 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்து 808 பேர் மரணமடைந்துள்ளனர்.

உ.பி.,யில் 22 ஆயிரத்து 147 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 660 பேர் மரணமடைந்துள்ளனர்.

மேற்கு வங்கத்தில் 17 ஆயிரத்து, 283 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 639 பேர் மரணமடைந்துள்ளனர்.

ராஜஸ்தானில் 17 ஆயிரத்து 271 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 399 பேர் மரணமடைந்துள்ளனர்.

தெலுங்கானாவில் 14 ஆயிரத்து 419 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 247 பேர் மரணமடைந்துள்ளனர்.

ஹரியானாவில் 13 ஆயிரத்து 829 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 223 பேர் மரணமடைந்துள்ளனர்.

ஆந்திராவில் 13 ஆயிரத்து 241 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 169 பேர் மரணமடைந்துள்ளனர்.

கர்நாடகாவில் 13 ஆயிரத்து 190 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 207 பேர் மரணமடைந்துள்ளனர்.

ம.பி.,யில் 13 ஆயிரத்து 186 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 557 பேர் மரணமடைந்துள்ளனர்.

பீஹாரில் 9 ஆயிரத்து 212 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 60 பேர் மரணமடைந்துள்ளனர்.

அசாமில் 7 ஆயிரத்து 206 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 பேர் மரணமடைந்துள்ளனர்.

காஷ்மீரில் 7 ஆயிரத்து 093 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 94 பேர் மரணமடைந்துள்ளனர்.

ஒடிஷாவில் 6 ஆயிரத்து 614 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 21 பேர் மரணமடைந்துள்ளனர்.

பஞ்சாபில் 5 ஆயிரத்து 216 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 133 பேர் மரணமடைந்துள்ளனர்.

கேரளாவில் 4 ஆயிரத்து 189 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 22 பேர் மரணமடைந்துள்ளனர்.

உத்தர்கண்டில் 2 ஆயிரத்து 823 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 38 பேர் மரணமடைந்துள்ளனர்.

சத்தீஸ்கரில் 2 ஆயிரத்து 662 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 பேர் மரணமடைந்துள்ளனர்.

ஜார்கண்டில் 2 ஆயிரத்து 364 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 பேர் மரணமடைந்துள்ளனர்.

திரிபுராவில் ஆயிரத்து 346 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 பேர் மரணமடைந்துள்ளனர்.

கோவாவில் ஆயிரத்து 198 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 பேர் மரணமடைந்துள்ளனர்.

மணிப்பூரில் ஆயிரத்து 185 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் கூட மரணமடையவில்லை.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.