
அவசர கால கடனுதவி திட்டத்தின் கீழ், ஜூன் 1ம் தேதி வரை, பொதுத்துறை வங்கிகள் ரூ.10,361.75 கோடி கடனுதவி அளித்துள்ளன என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு அறிவித்த, 20 லட்சம் கோடி ரூபாய் ஊக்கச் சலுகை திட்டத்தின் கீழ், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, அவசர கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ், 3 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. அதன்படி, இத்திட்டத்தின் கீழ் பொதுத் துறை நிறுவனங்கள், எவ்வித உத்தரவாதமும் இல்லாமல், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, கடன் வழங்கி வருகின்றன.
Public sector banks have already sanctioned loans worth Rs 10,361.75 crore under the 100% Emergency Credit Line Guarantee Scheme. Out of this, Rs 3,892.78 crore has already been disbursed. #PSBs #MSME #AatmanirbharBharat #ECLGS @FinMinIndia @PIB_India @DFS_India— NSitharamanOffice (@nsitharamanoffc) June 3, 2020
இதன்படி, ஜூன் 1ம் தேதி வரை, பொதுத்துறை வங்கிகள் ரூ.10,361.75 கோடி கடனுதவி அளித்துள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அலுவலகத்தின் டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாதத்தின் முதல் இரு நாட்களில் மட்டும் ரூ.3,892.78 கோடி கடனுதவி வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

AthibAn Tv