உளவுப்பிரிவு புதிய ஐ.ஜி.,யாக ஈஸ்வரமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

Dina AthibAn
0
மின்னம்பலம்:உளவுத்துறை ஐ.ஜி.யாக ...

உளவுப்பிரிவு ஐ.ஜி.,யாக இருக்கும் சத்திய மூர்த்தி ஓய்வு பெறுவதை அடுத்து, புதிய ஐ.ஜி.,யாக ஈஸ்வரமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக உளவுப்பிரிவு ஐ.ஜி சத்தியமூர்த்தி நாளையுடன் (மே 31) ஓய்வு பெறுகிறார். ஆளும் அரசுக்கு முக்கிய முடிவுகள் குறித்து தக்க ஆலோசனைகளை வழங்குவதில் உளவுப்பிரிவு ஐஜியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தற்போது பணிக்காலம் நிறைவடைவதால், அவருக்கு பணி நீட்டிப்பு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது. மேலும், போலீஸ் துறைக்கான ஆலோசகர் பணி வழங்கவும் அரசு பரிசீலித்ததாக கூறப்படுகிறது. பணி நீட்டிப்பு மற்றும் புதிய பொறுப்புகளை சத்தியமூர்த்தி மறுத்துள்ளார்.

இதனையடுத்து, காலியாகும் அந்த இடத்தில் ஈஸ்வரமூர்த்தி நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஈஸ்வரமூர்த்தி, தற்போது, சென்னை காவல்துறை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக உள்ளார், அதே பதவியிலும் தொடர்ந்து நீடிப்பார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!