சிறு குறு நிறுவனங்களுக்கு கூடுதல் கடன்: முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கோரிக்கை

Dina AthibAn
0
சிறுகுறுநிறுவனங்கள், வங்கிகள், கடன், முதல்வர்இபிஎஸ், ஆலோசனை, தலைமைசெயலகம்,

சிறு, குறு நிறுவனங்களுக்கு உடனடி தேவை கடன். இதனால், வங்கிகள் கூடுதல் கடன் வழங்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கூறியுள்ளார்.

சிறு குறு நிறுவனங்களுக்கு எளிய முறையில் கடன் வழங்குவது குறித்து வங்கி நிர்வாகிகளுடன் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினர்.

தலைமை செயலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பேசியதாவது: கொரோனாவில் இருந்து தமிழகத்தில் தான் அதிகம் பேர் குணமடைகின்றனர். ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பொருளாதாரத்தை மீட்டெடுக்க வங்கிகளின் ஒத்துழைப்பு அவசியம். வங்கிகள் சிறப்பு முகாம்கள் மூலம் உழவர் கடன் அட்டைகளை வழங்க வேண்டும். விவசாயத்திற்கான கடனை உடனடியாக வழங்க வேண்டும். தமிழகத்தில் 5 லட்சம் சிறு, குறு நிறுவனங்கள் உள்ளன. அந்த நிறுவனங்களுக்கு உடனடி தேவை கடன் தான். இதனால் கூடுதல் கடன் வழங்க வேண்டும். தமிழக அரசுக்கு வங்கி அதிகாரிகளின் ஒத்துழைப்பு தேவை. இவ்வாறு அவர் பேசினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!