Type Here to Get Search Results !

பொருளாதாரத்தை சீர்படுத்த ரூ.50 லட்சம் கோடி வரை தேவைப்படுகிறது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

மத்திய அமைச்சரவையில் இருக்கவே ...

 நாட்டின் பொருளாதாரத்தை சீர்படுத்த ரூ.50 லட்சம் கோடி வரை தேவைப்படுகிறது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

கொலை பற்றி படிக்க  : மீண்டும் ஒரு இந்து சாது படுகொலை | Once again a Hindu Sadhu massacre


கொரோனா வைரசால் பாதிப்படைந்த பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாக மத்திய அரசு, ரூ.20 லட்சம் கோடி அளவிற்கு பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தை அறிவித்தது. இதனால், சுமார் 45 லட்சம் நிறுவனங்கள் பயனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பொருளாதார நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது: மார்ச் மாதத்தில் இருந்து முடங்கிக் கிடக்கும் சுமார் 6 லட்சம் சிறு, குறு நடுத்தர தொழில்களை சீர்படுத்த வேண்டும். சுமார் 25 லட்சம் சிறு, குறு, நடுத்தர தொழில்களை சீரமைக்க நாங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

இந்த நிறுவனங்களுக்கு நிலுவை தொகையை 40 நாட்களுக்கு பிறகு செலுத்துவதற்கு வழிகளை செய்துள்ளோம். பெரும்பாலான தடைகளும் அகற்றப்பட்டுள்ளன. சந்தையில் பணப்புழக்கம் இல்லை. பொருளாதாரத்தின் சக்கரம் மீண்டும் செயல்படுவதற்கு நாட்டின் பொருளாதாரத்தை சீர்படுத்த ரூ.50 லட்சம் கோடி வரை தேவைப்படுகிறது. மத்திய அரசில் இருந்து ரூ.20 லட்சம் கோடி, மாநில அரசுகளில் இருந்து ரூ.20 லட்சம் கோடி, பொது மற்றும் தனியார் முதலீடுகளில் இருந்து ரூ.10 லட்சம் கோடி தேவைப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.