நாட்டின் நிதிப் பற்றாக்குறை, கடந்த நிதியாண்டில், 4.59 சதவீதமாக உயர்ந்துள்ளது.

Dina AthibAn
0
நாட்டின் நிதிப் பற்றாக்குறை 52 ...

கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத வகையில், 2018 - 19ம் நிதியாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 4.6 சதவீதமாக நிதிப்பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இதற்கு முன், கடந்த, 2012 - 13ம் நிதியாண்டில் தான் நிதிப் பற்றாக்குறை, 4.9 சதவீதமாக அதிகரித்திருந்தது.

நிதிப் பற்றாக்குறை அதிகரித்ததற்கு அரசு கடன் வாங்கியதும், வரிவசூல் குறைந்து போனதுமே முக்கிய காரணமாகும். மேலும், வருவாய் பற்றாக்குறையும், 3.27 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆரம்பத்தில் வருவாய் பற்றாக்குறை இலக்கு, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 2.3 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பின் அது மாற்றப்பட்டு, 2.4 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது.

கடந்த நிதியாண்டின் இறுதி காலகட்டத்தில், அதாவது மார்ச், 25ம் தேதியிலிருந்து, நாடு முடக்கப்பட்டதும் வரி வருவாய் குறைந்து போனதற்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. கடந்த நிதியாண்டில், மொத்த வருவாய், 19.31 லட்சம் கோடி ரூபாய் இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், 17.5 லட்சம் ரூபாயாக குறைந்துவிட்டது. அரசின் மொத்த செலவு, 26.86 லட்சம் கோடி ரூபாயாகும். இது, 26.98 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என, முன்னர் கணிக்கப்பட்டிருந்தது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!