Type Here to Get Search Results !

காஷ்மீரில் 20 கிலோ வெடிப்பொருளுடன் சிக்கிய கார்; மீண்டும் தாக்குதலுக்கு திட்டம்?

latest tamil news

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் 20 கிலோ வெடிப்பொருட்களுடன் சென்ற காரை பாதுகாப்புப்படையினர் கைப்பற்றியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Pulwama, IED, Car, Bombing, Stopped, Driver, Escaped, kashmir, india, புல்வாமா, வெடிப்பொருள், கார், பாதுகாப்புப்படையினர், டிரைவர், தாக்குதல்

கடந்தாண்டு ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் காரில், வெடிப்பொருட்களுடன் வந்து சி.ஆர்.பி.எப் வீரர்கள் வந்த வாகனத்தில் மோதி தாக்குதல் நடத்தினர். இதில் 40க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது என்னும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட்டில் செயல்பட்ட பயங்கரவாத தளங்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல்களை நடத்தியது.

இந்நிலையில், இன்று (மே 28) அதிகாலை புல்வாமா மாவட்டத்தில் 20 கிலோ வெடிப்பொருட்களுடன் கூடிய காரை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.