Type Here to Get Search Results !

விடுமுறை நாள் என்பதால் திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

 விடுமுறை நாள் என்பதால் திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. மேலும், சூரனை மரண ஸ்தலமாகவும், குரு ஸ்தலமாகவும் கருதுகின்றனர்.

இந்நிலையில் வார விடுமுறை நாளான இன்று கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்துள்ளனர். காலை முதல் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். ஒருபுறம் மாலையும் கழுத்தும் அணிந்து திருமணம் செய்ய வரும் தம்பதியரும், மறுபுறம் மொட்டையடித்து காணிக்கை செலுத்தும் பக்தர்களும் வருவதால் கோவில் வளாகம் பக்தர்கள் கூட்டமாக காணப்படுகிறது.

பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், கோவில் வளாகம், கடற்கரை பகுதி, நாழிக்கிணறு, முக்கிய சாலைகள் என அனைத்து பகுதிகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்களின் வருகை அதிகரித்து வருவதையொட்டி கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.