நடிகை காஜல் அகர்வால் தமிழில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக ‘இந்தியன் 3’ படத்தில் நடித்துள்ளார்.

திருமணத்திற்கு பிறகும் காஜல் அகர்வால் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தமிழில் கமல்ஹாசனுடன் இந்தியன் 3 படத்திலும், தெலுங்கில் சத்யபாமாவிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் காஜல் அகர்வால் அளித்துள்ள பேட்டியில், "இந்தி திரையுலகம், தென்னிந்திய திரையுலகம் என்ற பாகுபாடு உள்ளது. இந்தியில் ஷர்மிளா தாகூர், ஹேமமாலினி திருமணத்திற்கு பிறகும் நடித்தனர். இப்போதும் இந்தியில் திருமணமான நடிகைகள் தீபிகா படுகோனே. மற்றும் ஆலியா பட், தென்னிந்திய திரையுலகில் திருமணமான நடிகைகளுக்குக் கிடைக்கக்கூடிய பாத்திரங்களை பெறவில்லை.
இதில் நயன்தாரா விதிவிலக்கு. அவருடைய படங்களின் தேர்வு எனக்கு மிகவும் பிடிக்கும். தென்னிந்திய திரையுலகில் திருமணமான நடிகைகள் ஒதுக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையை விரைவில் மாற்றுவோம். இந்த தலைமுறை நடிகைகள் திருமணமாகி குழந்தை பெற்ற பிறகும் தொடர்ந்து நடித்து வருகின்றனர்.
ரசிகர்களின் பார்வையும் மாறி வருகிறது. நல்ல கதையம்சம் கொண்ட படங்களை ரசிக்கிறார்கள். வாய்ப்பு கிடைத்தால் முக்கிய வேடங்களிலும் நடிக்கலாம்,'' என்றார்.

AthibAn Tv