Type Here to Get Search Results !

கோடை விடுமுறையையொட்டி, திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு

 கோடை விடுமுறையையொட்டி, திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து, வைகுண்டம் கியூ வளாகத்தில் உள்ள அனைத்து அறைகளும் நிரம்பி வழிகின்றன.

உலகப் புகழ்பெற்ற திருப்பதி கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். 300 ரூபாய் கட்டணத்தில் சிறப்பு தரிசனம் செய்யும் பக்தர்கள், குறிப்பிட்ட நேரத்தில் தரிசனம் செய்கின்றனர்.

ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாதவர்கள் டைம் ஸ்லாட் முறையில் டோக்கன் பெற்று நேரடியாக சர்வ தரிசன வரிசையில் வந்து டிக்கெட் பெற்று தரிசனம் செய்யலாம். ஆனால் இதற்கும் 6 மணி முதல் 12 மணி நேரம் ஆகும். டிக்கெட் எடுப்பதற்கும், தரிசனத்துக்கு டிக்கெட் கிடைத்த பிறகும் காத்திருக்க வேண்டும்.

ஆன்லைனில் முன்பதிவு செய்யாமல், டைம் ஸ்லாட் டோக்கன் கிடைக்காமல் நேரடியாக இலவச தரிசனத்துக்கு வருபவர்கள் அன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப ஓரிரு நாட்கள் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டியுள்ளது.

இதனால் இந்த ஆண்டு கோடை விடுமுறையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. வைகுண்டம் கியூ வளாகத்தில் உள்ள அனைத்து அறைகளும் நிரம்பியுள்ளன. சில நாட்களில் நேரடி இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய இரண்டு நாட்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.

தற்போது கோடை விடுமுறை முடிந்துள்ளதால் திருப்பதி திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. வைகுண்டம் கியூ வளாகத்தில் உள்ள அறைகள் நிரம்பியுள்ளன, சிலா தோரணத்திற்கு சுமார் 3 கி.மீ. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இலவச தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் சுமார் 30 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர். காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தேவஸ்தான நிர்வாகம் செய்து வருகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.