
கொரோனாவுக்கு பின் இந்தியா - இஸ்ரேல் நல்லுறவு குறித்து அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூவுடன், பிரதமர் மோடி தொலைபேசியில் கலந்துரையாடினார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல்வேறு நாட்டு தலைவர்களுடன் தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். இந்நிலையில், இன்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ மற்றும் கம்போடியா பிரதமர் ஹன் சென்னுடன் தொலைபேசியில் பேசினார்.
நெதன்யாஹூவுடன்
இஸ்ரேல் பிரதமருடன் பேசியது குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டதாவது: கொரோனாவுக்கு பின் இந்தியா - இஸ்ரேல் நல்லுறவு குறித்து, எனது நண்பர் பெஞ்சமின் நெதன்யாஹூவுடன் கலந்துரையாடினேன். 5வது முறையாக பிரதமர் பதிவி ஏற்றிருக்கும் அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன். வரும் நாட்களில் இரு நாடுகளின் நல்லுறவு மேலும் வலுப்பெறும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
ஹன் சென்னுடன்
கம்போடியா பிரதருடன் கலந்துரையாடியது குறித்து மோடி டுவிட்டரில் பதிவிட்டதாவது: கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து கம்போடியா பிரதமர் ஹன் சென்னுடன் பேசினேன். இந்தியாவும், கம்போடியாவும், கலாச்சாரம் மற்றும் வரலாற்று தொடர்புகளை கொண்டுள்ளன. அந்நாட்டுடன் உறவை மேலும் வலுப்படுத்துவதில் இந்தியா கொண்டிருக்கும் உறுதிப்பாட்டை தெரிவித்தேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

AthibAn Tv