
டில்லியில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், வைரசை கட்டுப்படுத்துவது குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா, டில்லி முதல்வர் கெஜ்ரிவால் முக்கிய ஆலோசனை நடத்தினர்.
நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா, தலைநகர் டில்லியையும் விட்டு வைக்கவில்லை. அங்கு இதுவரை 31 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 905 பேர் பலியாகி உள்ளனர். ஜூலை இறுதிக்குள் டில்லியில் 5.50 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படலாம் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆலோசனை நடத்தினர். இதன்பின் கெஜ்ரிவால் டுவிட்டரில், 'டில்லி அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், மத்திய அரசு செய்து தரும் என பதிவிட்டுள்ளார்.

AthibAn Tv