
'தென்மேற்கு பருவக்காற்றால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும்' என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
அந்த மையம் வெளியிட்ட அறிவிப்பு: மத்திய கிழக்கு அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக வங்க கடலில் அலைகள் கொந்தளிப்பாக காணப்படும். தென்மேற்கு மத்திய மேற்கு அரபிக்கடல் கோவா அதையொட்டிய கர்நாடக கடலோர பகுதிகள் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஜூன் 14 வரை சூறாவளி காற்று வீசும். எனவே இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக இன்றும், நாளையும்(ஜூன் 11, 12) தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யலாம். இவ்வாறு அறிவித்துள்ளது.

AthibAn Tv