
இந்தியாவில் கடந்த 1918 -19 ஆம் ஆண்டுகளில் "ஸ்பானிஷ் ஃப்ளு" என்னும் நுரையீரல் சம்பந்தப்பட்ட பெருந்தொற்று, மனித உயிர்களை பெரும் காவு வாங்கியது. இந்தியாவில் இத்தொற்று ஒண்ணரை கோடி மக்களை பலி ஆக்கியது. முதலாம் உலகப்போர், பருவமழை பொய்த்தது இவைகளெல்லாம் வேறு அன்றய மக்களை வாட்டின. இன்று போலவே அன்றும் மும்பை பெருநோய்த்தொற்றில் முதலிடமும் சென்னை இரண்டாவது இடத்திலும் இருந்தன. ஆனால் அக்கால தொற்று இருபது முதல் நாற்பது வயதோரை [இந்தியாவில்] பெரிதும் பாதித்தது. இதனால் பிறப்பு விகிதமே பெரிதும் குறைந்து விட்டது எனலாம். அன்றய தொற்றும் பயணத்தின் வாயிலாகவும், கூட்டமிக்க இடங்களில் அலைவதாலும் விரைவில் ஏற்பட்டது. அக்காலகட்டத்தில் தொற்று ஏற்பட்டு மருத்துவ வசதிகள் குறைவு காரணமாக எண்ணற்றோர் கொத்து கொத்தாக செத்து மடிந்தனர். இது "மயான கொள்ளை" என்று சொல்லப்பட்டது. (அவ்விறப்பினை நினைவு கூறும் வண்ணம், இன்றும் கூட திருவண்ணாமலை, புதுச்சேரி, விழுப்புரம், கடலூர்,காரைக்கால், நாகை மாவட்டப் பகுதிகளில் அம்மனுக்கு விழாவாகவே [மசான கொள்ளை என்று] எடுத்து நடத்துகின்றனர்). தொற்றின் முதல் அலையினை விட இரண்டாம் அலையில் ஏராளமான பெண்களும் இறந்தனர்.
இதற்கு காரணம் போதிய மருத்துவ வசதி இல்லாததால் தொட்டு ஏற்பட்டவர்களை பெண்களே கவனித்து வந்ததால் இறப்பும் அதிகமாயிற்று. இன்று போலவே அன்றும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது என்றாலும் வறுமை காரணமாக அன்றாடம் வேலைக்கு செல்வது அத்தியாவசியமாயிற்று. கூலி தொழிலாளிகள் நெரிசலான பகுதிகளில் [மண்ணடி, ஜார்ஜ் டவுன்,போல] வசித்ததால் தொற்றின் வீரியம் பரவலாகிவிட்டது. இதுவே வரலாறு கூறும் உண்மை.
இன்றும் கூட அதேபாணியில் பெருந்தொற்று ஏற்பட்டு உள்ளது. இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மருத்துவ வசதிகள் நன்கு மேம்பட்டு உள்ளன. அக்காலத்தை விட இன்று தமிழக மக்களின் வாழ்க்கை தரமும் மேலோங்கி உள்ளது. சென்னை பெருநகர் அன்று போலவே இன்றும் நெரிசலில் இருப்பதால் தொற்றும் மிகுதியாகி உள்ளது.
அதே நேரம் வாழ்க்கை தரம் உயர்வால் மக்களின் ஆரோக்கியம் பெருகி இருக்கிறது. இருந்தாலும் உடலில் எதிர்ப்பு சக்தி அவ்வளவாய் இல்லாதவர் மரண தறுவாய்க்கு செல்கின்றனர். எல்லாவற்றையும் விட இத்தொற்றனுக்கு இன்னும் மருந்து இல்லாததால் ஒவ்வொருவரும் தம்மை "தனிமை படுத்தி" இருந்து,நெரிசல் இடங்களுக்கு செல்லாமல்,அரசு சொல்லும் முன்னெச்சரிக்கைகளை கடைபிடித்து வந்தாலே தொற்றில் இருந்து ஒவ்வொருவரும் தப்பித்து விடலாம். தொற்றின் இரண்டாம் அலை இன்னும் மோசமாக இருக்கும் என்பதே வரலாறு உணர்த்தும் பாடம்.
தனி மனித விலகலை முழுமையாக கடைபிடிக்காவிட்டால் சென்னை பெருந்தொற்றில் மோசமாய் பாதிக்கப்பட்டு அநியாயமாக உயிரிழப்பு ஏற்பட்டு விடும். அதனை தவிர்க்கும் பொருட்டு 'பொது முடக்கம்' சென்னை மாவட்டம் மட்டுமல்லாது சென்னை பெரு நகர வளர்ச்சி பகுதிகளிலும்- தளர்வுகள் இல்லாத பொது முடக்கத்தை- அரசு மீண்டும் நடைமுறை படுத்தினால் ஒழிய, இப்பெருந்தொற்று கட்டுக்குள் வாராது.

AthibAn Tv