Type Here to Get Search Results !

சீனா ராணுவ நிர்வாகம் மற்றும் பயிற்சி திட்டங்களை நவீனமயமாக்க, ஜின்பிங் வலியுறுத்தியுள்ளர்

India-China War: போருக்கு தயார் ஆகுங்கள் ...

சீன அதிபர் ஜின்பிங், ராணுவத்தின் தரத்தை மேம்படுத்துவது தொடர்பான நிர்வாக நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஜின்பிங், சீன ராணுவ பயிற்சி திட்ட கருத்தரங்கில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: ராணுவத்திற்கு, திட்ட மேலாண்மை பயிற்சி மிகவும் முக்கியம்.ராணுவ துறையில் உள்ள பிரச்னைகள், இடர்பாடுகள் போன்றவற்றை அடையாளம் கண்டு, அவற்றுக்கு தீர்வு காணும் வகையில், நிர்வாக செயல் திட்டங்களை மேம்படுத்த வேண்டும். இதன் மூலம், ராணுவத்தின் செயல்பாடுகளை மேலும் நவீனமயமாக்க முடியும்.

ராணுவ துறையில், 13வது ஐந்தாண்டு திட்டத்தில் திட்டமிட்ட பணிகள் அனைத்தையும் முடித்து, 14வது ஐந்தாண்டு திட்டத்தை செயல்படுத்துவதற்கான முயற்சியில், தீவிரமாக களமிறங்க வேண்டும்.ராணுவத்தை நவீனமயமாக்குவதற்கு வசதியாக, பட்ஜெட்டில், கடந்த ஆண்டை விட, இந்தாண்டு, 150 லட்சம் கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

லடாக்கில், இந்தியா - சீனா ராணுவத்தினரின் மோதலால், பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில், ராணுவ நிர்வாகம் மற்றும் பயிற்சி திட்டங்களை நவீனமயமாக்க, ஜின்பிங் வலியுறுத்தியுள்ளது, முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.