
தமிழகம் முழுவதும் கொரோன வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டன, இந்நிலையில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் ஜூன் 15 வரை நீட்டிக்கபட்டு வழங்கப்பட்டது.
தற்போது நுகர்வோர்களிடமிருந்து மின் கட்டணம் வசூல் செய்யத் தடை விதித்தால் அது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும்’ என்பதால் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரியப்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்க நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யபட்டன. மற்றும் மின்கட்டணம் செலுத்துவதறகான கால அவகாசத்தை ஜூலை மாதம் 31-ம் தேதி வரை நீட்டிக்க கோரி வழக்கறிஞர் சி.ராஜேஷ் என்பவர் வழக்கு ஓன்று தாக்கல் செய்து உள்ளார்,
இந்நிலையில் கொரோன தொற்றின் பரவல் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வரும் நிலையில், தற்போது மீண்டும் தமிழக அரசு ஊரடங்கு நீட்டிக்கபட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் மின் கட்டணம் கட்டாயமாக செலுத்த வேண்டும் , இருப்பினும் கால அவகாசம் நீட்டிக்கப்படாது என தெரிவித்துள்ளது.இதையடுத்து, இந்த வழக்கை ஜூன் 22-ம் தேதிக்குத் வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என அறிவித்தனர்.


AthibAn Tv