
கொரோன வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றன. உலக நாடுகளில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் முதல் இடத்தில் அமெரிக்க மற்றும் இரண்டாவது இடமாக பிரேசில் நாடு மூன்றாவது இடமாக இந்தியா உள்ளது. இந்த தொற்றை கட்டுப்படுத்தும் முறையில் பல நாடுகளில் அரசுகள் தகுந்த நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,065 பேருக்கு கொரோனா பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. மற்றும் கொரோன வைரஸ் தொற்றால் அந்நாட்டின் மொத்த எண்ணிக்கை 22,34,465 ஆக அதிகரித்துள்ளது.
மற்றும் ஒரே நாளில் அமெரிக்காவில் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 809 பேர் ஆகும், தற்போது பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,19,941 ஆக அதிகரித்து உள்ளது என அந்நாட்டின் சுகாதாரத் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளனர்.


AthibAn Tv