Type Here to Get Search Results !

தங்களது கிராமத்தை முன்னேற்ற விரும்பும் மக்கள் பிரதமர் மோடி

கொரோனா நமக்கு சுய சார்பு ...

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சொந்த மாவட்டங்களிலேயே வேலை வழங்கும் வகையில் கரீப் கல்யாண் ரோஜ்ஹார் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். தொடர்ந்து, பேசும் போது, வெளிமாநிலங்களில் வேலைபார்த்துவிட்டு, ஊரடங்கு காரணமாக சொந்த ஊர் திரும்பியவர்கள், தங்களது கிராமத்தை முன்னேற்ற விரும்புவதாக குறிப்பிட்டார்.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அவர்களின் சொந்த மாவட்டங்களிலேயே வேலை வழங்கவும் 'கரீப் கல்யாண் ரோஜ்ஹார்' திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. ஊரக பகுதிகளில் உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்காக 50 ஆயிரம் கோடி மதிப்பீட்டில், பீஹார், உ.பி., ம.பி., ராஜஸ்தான், ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசா ஆகிய 6 மாநிலங்களில், 116 மாவட்டங்களில் 25 வகையிலான பணிகள் மேற்கொள்ளப்படும். மொத்தம் 125 நாட்கள் இந்த பணி நடக்கும். இந்த திட்டத்தை பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்தார். பீஹார் மாநிலம் ககாரியா மாவட்டத்தில் உள்ள தெலிகர் கிராமத்தில், இந்த திட்டத்தின் கீழ் நடக்கும் பணியை வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக மோடி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், பீஹார் முதல்வர் நிதிஷ்குமார், ம.பி., முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

திட்டத்தை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: வரலாற்று சிறப்பு மிக்க நாள் இன்று. ஏழைகளின் வாழ்வாதாரம் மற்றும் நலனுக்கான திட்டம் இன்று துவக்கி வைக்கப்படுகிறது. இந்த திட்டம், கிராமத்தில் வசிக்கும் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் தான், ஊரடங்கு காரணமாக, பல்வேறு மாநிலங்களில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். அவர்கள் தங்களின் திறன் மற்றும் தகுதி மூலம் தங்களது கிராமத்தை முன்னேற்ற வேண்டும் என விரும்புகின்றனர். உங்களின் எண்ணங்களையும், தேவைகளையும் நாடு புரிந்து கொள்கிறது. 6 மாநிலங்களில், 116 மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

லடாக்கில் சீன படையினருடன் நடந்த மோதலில் பீஹார் ரெஜிமென்ட்டை சேர்ந்த வீரர்கள் காட்டிய தைரியம் பெருமை அளிக்க வைக்கிறது.லடாக்கில் உயிர் தியாகம் செய்த வீரர்களை கண்டு நாடு பெருமிதம் கொள்கிறது. பீஹார் ரெஜிமென்ட்டை சேர்ந்த வீரர்களின் தைரியத்தை க ண்டு, ஒவ்வொரு பீஹாரியும் பெருமைப்பட வேண்டும். நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த தைரியமிக்க வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.