Type Here to Get Search Results !

லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு முழுவதையும் சீனா சொந்தம் கொண்டாட முயற்சி

கல்வான் பகுதிக்கு உரிமை கோரும் சீன ...

லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு முழுவதையும் சீனா சொந்தம் கொண்டாட முயற்சி செய்கிறது. இதற்காக வரலாற்று ஆதாரங்களை காட்டி சீன நிபுணர் ஒருவர் உரிமை கோரியுள்ளார்.

கல்வான் மற்றும் ஷ்யோக் நதிகள் சங்கமிக்கும் இடம் வரை தங்களுடையது என சீனா சொந்தம் கொண்டாடுகிறது. இந்நிலையில், சீனாவை சேர்ந்த எல்லைகள் விவகார நிபுணர் ஸாங் யோங்பான் என்பவர், வரலாற்று ஆதாரங்களைக் காட்டி ஒட்டுமொத்த கல்வான் பகுதியும் சீனாவுக்குரியதே என்று குளோபல் டைம்ஸில் பேட்டியளித்துள்ளார்.

மேலும் ஷ்யோக் நதிப்பகுதியில், இந்திய கட்டுமானங்கள் உள்ள பகுதிகளையும், சீனாவுக்கு சொந்தம் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், அங்குள்ள விமான நிலையம், பாலம், சாலைகள் அமைத்துள்ள பகுதியில் சீனாவுக்கு சொந்தம் என கூறியுள்ளார். இது தொடர்பாக குவிங் பேரரசு (1644-1911) கால ஆதாரங்களையும், இலக்கியங்களையும் ஆதாரமாக காட்டியுள்ளார்.

ஆனால் இதனை இந்திய வெளியுறவு அமைச்சகம் ஆதாரமற்றது எனக்கூறி மறுப்பு தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.