Type Here to Get Search Results !

இனி சீன கம்யூனிஸ கட்சியின் செயல்பாடுகளை பொறுத்துக்கொண்டு இருக்க முடியாது மைக் பாம்பியோ

latest tamil news

சீனா-இந்தியா ராணுவங்கள் முன்னதாக மோதியதில் 43 சீன வீரர்கள் உயிரிழந்தனர், மற்றும் 20 இந்திய வீரர்களும் வீரமரணம் அடைந்தனர். இதனையடுத்து இந்திய அரசு அத்துமீறித் தாக்கிய சீன அரசை கண்டித்து அதன் பொருட்களைப் புறக்கணிக்க வலியுறுத்தியது. தற்போது இந்தியாவின் நட்பு நாடான அமெரிக்கா சீனாவின் இந்த அத்துமீறிய தாக்குதலுக்கு கருத்து தெரிவித்துள்ளது. அமெரிக்க மாநில செயலாளர் மைக் பாம்பியோ இந்த தாக்குதல் குறித்துப் பேசுகையில்,

‛சீனா தென் சீன கடலில் ராணுவத் தளத்தை அமைத்து அராஜகத்தில் ஈடுபடுகிறது. அண்டை நாடுகளை மிரட்டு வரும் சீனாவின் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்தியாவின் மீது அத்துமீறித் தாக்குதல் நடத்தியது அண்டை நாடுகள் மீதான சீனாவின் அராஜகப் போக்கைக் காட்டுகிறது. ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் விரும்பும் அனைவரும் சீனாவின் சர்வாதிகார கம்யூனிஸ அரசை எதிர்க்க வேண்டும்,' எனத் தெரிவித்துள்ளார்.

பாம்பியோ தனது உரையில் மிக கவனமாக சீன அதிபர் ஜி ஜின் பிங்கை விமர்சிப்பதை குறைத்து சீன கம்யூனிஸ கட்சியின் நடவடிக்கைகளையும் அதன் கொள்கைகளையும் விமர்சித்தார். சீன இஸ்லாமியர்களை குறிவைத்து அதிபர் ஜின்பிங் தாங்கி வருவது மனித உரிமை மீறல். இதனை கடைசியாக இரண்டாம் உலகப் போரில் தான் கண்டுள்ளோம். தற்போது இந்தியாவுடன் எல்லைப் பிரச்னையில் சீனா ஈடுபட்டு வருவது மட்டுமல்லாமல் மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுடனும் பொருளாதார விஷயங்களில் சிக்கல் ஏற்படுத்தி வருகிறது.

கல்வான் தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து முன்னதாக பாம்பியோ தன் இரங்கலைத் தெரிவித்து இருந்தார். அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு உண்டாக்க சீனா பல பொய்த்தகவல்களைப் பரப்பி வருகிறது. சீன பொலிட்புரோ உறுப்பினர் யாங் ஜைசி இன் ஹவாயை பாம்பியோ சந்தித்துப் பேசினார். இனி சீன கம்யூனிஸ கட்சியின் செயல்பாடுகளை பொறுத்துக்கொண்டு இருக்க முடியாது. தேவை ஏற்பட்டால் அமெரிக்கா செயலில் இறங்கும் என அவரிடன் பாம்பியோ கூறி உள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.