Type Here to Get Search Results !

பிரதமர் மோடியின் உரை மற்றும் வெளியுறவு துறை செய்தி தொடர்பாளரின் உரையை சீன இணைய தளங்கள் நீக்கி உள்ளது

Pm Modi To Address Nation In Special All India Radio Broadcast At ...

எல்லை நெருக்கடி குறித்து பிரதமர் மோடியின் உரை மற்றும் வெளியுறவு துறை செய்தி தொடர்பாளரின் உரையை சீன இணைய தளங்கள் நீக்கி உள்ளதாக இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

சீனாவில் இருந்து வெய்போ உள்ளிட்ட இரண்டு இணைய தளங்கள் செயல்படுகின்றன. டுவிட்டரை போன்று உள்ள வெய்போவிற்கு மில்லயின் கணக்கான பயனாளர்கள் உள்ளனர். பிரதமர் மோடிகடந்த2015 ம் ஆண்டு சீனாவிற்கு சென்றிருந்த போது சீன மக்களுடன் தொடர்பு கொள்வதற்காக வெய்போவில் கணக்கை துவக்கி இருந்தார்.

லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15-ம் தேதி(திங்கள்கிழமை) சீன ராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலில் கர்னல் உட்பட 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதனை குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோடி லடாக்கில் கால்வான் பள்ளத்தாக்கு மோதலில் கொல்லப்பட்ட இந்திய வீரர்களின் தியாகம் வீணாகாது என்பதை வலியுறுத்திய மோடி, இந்தியா அமைதியை விரும்புகிறது, ஆனால் தூண்டப்பட்டால் பொருத்தமான பதிலைக் கொடுக்கும் திறன் கொண்டது என்று கூறி இருந்தார். பிரதமரின் இந்த உரையை வெய்போ தனது பக்கத்தில் இருந்து நீக்கி உள்ளது.

மேலும் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா சீனா, அதன் நடவடிக்கைகளை உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டிற்குஉட்பட்ட பக்கத்திலேயே நடத்தி கொள்ள வேண்டும். , அதை மாற்றுவதற்கு ஒருதலைப்பட்ச நடவடிக்கை எடுக்கக்கூடாது. என கூறி இருந்தார். அனுராக் ஸ்ரீவாஸ்தவாவின் இந்த கருத்துக்களும் நீக்கப்பட்டு இருப்பதாக இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.