Type Here to Get Search Results !

கொரோனா பரிசோதனை ஒரு மணி நேரத்தில் முடிவைச் சொல்லும் இக்கருவி

latest tamil news

கோவாவைச் சேர்ந்த மோல்பையோ நிறுவனம் கொரோனா பரிசோதனைகளுக்கான ட்ரூனேட் என்ற கருவியை இந்தியாவிலேயே தயாரித்துள்ளது. ஒரு மணி நேரத்தில் முடிவைச் சொல்லும் இக்கருவி மூலம் இதுவரை 10 லட்சம் பரிசோதனைகளுக்கு மேல் நடைபெற்றுள்ளன.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஏப்ரல் 10ம் தேதி ட்ரூனேட் கருவிகள் மூலம் கொரோனா வைரஸ் பரிசோதனைகள் மேற்கொள்ள அனுமதி தந்தன. தற்போது 1,650 ட்ரூனேட் கருவிகள் பயன்பாட்டில் உள்ளது. இதன் மூலம் இதுவரை 10 லட்சம் பரிசோதனைகளுக்கு மேல் நடந்துள்ளன. பேட்டரி மூலம் இயங்கக்கூடிய கையடக்க கருவியான ட்ரூனேட்டை இயக்குவதற்கு ஏசியோ அல்லது உயிரி பாதுகாப்பு அரங்கமோ தேவையில்லை. சாதாரண அறையிலும் வைத்து பரிசோதிக்கலாம்.

இக்கருவி முதலில் காசநோய் பரிசோதனைக்கு பெயர் பெற்றதாக இருந்தது. இவற்றை தற்போது கொரோனா துரித பரிசோதனைக்கு பயன்படுத்துக்கின்றனர். இக்கருவின் மூலம் எச்.ஐ.வி., டெங்கு, சிக்குன்குன்யா, பன்றிக்காய்ச்சல், ஹெப்படைட்டிஸ் ஏ மற்றும் பி போன்ற 25 நோய் கிருமிகளின் மாதிரிகளை பரிசோதிக்கலாம். 30 நிமிடங்களில் இருந்து அதிகபட்சம் 60 நிமிடங்களுக்குள் இவற்றின் மூலம் முடிவுகளை அறிய முடிகிறது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மஹாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் போன்ற பல மாநிலங்கள் இக்கருவிகளுக்காக மோல்பையோ நிறுவன வாசலில் காத்திருக்கின்றன.

கொரோனா இல்லை என்பதை உறுதிப்படுத்த மட்டுமே ட்ரூனேட் கருவி பயன்படுத்தப்படுகிறது. கொரோனா இருப்பதை அறிய ஆர்டி - பிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும். ஆனால் தற்போது அதே கருவியில் இரண்டாம் கட்ட பரிசோதனை செய்து கொரோனா தொற்றை உறுதிப்படுத்திக்கொள்ள ஐ.சி.எம்.ஆர் அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கான சிறப்பு சிப்கள் ஏற்கனவே இக்கருவிகள் பொருத்தப்பட்டுள்ள மருத்துவமனைகளுக்கு வழங்கப்படுள்ளன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.