Type Here to Get Search Results !

டிரம்ப் 10 லட்சம் அமெரிக்கர்களில் 10 பேர் இனவாதிகள் என்ற கருப்பின மக்களின் விமர்சனத்துக்கு கடுமையான எதிர்ப்பு

latest tamil news

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 10 லட்சம் அமெரிக்கர்களில் 10 பேர் இனவாதிகள் என்ற கருப்பின மக்களின் விமர்சனத்துக்கு டல்லாஸ் கூட்டத்தில் கடுமையான எதிர்ப்பு மற்றும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.

ஜார்ஜ் பிளாயிட் படுகொலை பல மேலை நாடுகளில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. மினேசோட்டா மாகாணத்தில் இருந்து பரவிய கருப்பர்கள் போராட்டம், அமெரிக்கா முழுவதும் பரவி பின்னர் படிப்படியாக ஓய்வு பெற்று வருகிறது. அமெரிக்காவைத் தொடர்ந்து பிரிட்டனிலும் ஜார்ஜ் பிளாயிட் இனவெறி கொலைக்கு போராட்டம் நடைபெற்றது. சமீபத்தில் ஜார்ஜின் உடல் கருப்பின மக்கள் இசை ஆரவாரங்களுடன் அமைதியான முறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. காலாகாலமாக ஒடுக்கப்பட்ட கருப்பின மக்களின் குரலாகவே இந்த போராட்டம் நடைபெற்றதாக அமெரிக்க சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் தற்போது நிறவெறி கொண்ட வெள்ளை இன மக்களுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பல கருப்பின ஆதரவாளர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். ‛10 லட்சம் புத்திசாலி அமெரிக்கர்களில் 10 பேர் இனவாதிகளாக உள்ளனர்' என்ற இணைய பதிவு வைரலானது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் 10 லட்சம் அமெரிக்கர்களில் 10 பேர் இனவாதிகள் என்ற கருப்பின ஆதரவாளர்களின் விமர்சனத்துக்கு டல்லாஸ் கூட்டத்தில் கடுமையான எதிர்ப்பு மற்றும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.

போராட்டத்தின்போது கடைகளை சூறையாடுபவர்களை கொள்ளையர்கள் என முன்னதாக விமர்சித்து இருந்த டிரம்ப், இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்தால் தான் ராணுவத்தை அழைக்க வேண்டி இருக்குமெனத் தெரிவித்து இருந்தார். இது சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.