
காங்கிரஸ் - சீனா இடையே ரகசிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் ராஜிவ் அறக்கட்டளைக்கு சீனா நிதி வழங்கியுள்ளதாக பா.ஜ., தலைவர் ஜேபி நட்டா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வீடியோ கான்பரன்ஸ் முறையில் நட்டா பேசியதாவது:
கடந்த 2017 ம் ஆண்டில், டோக்லாமில் இந்தியா - சீனா படைகள் நேருக்கு நேர் சந்தித்து கொண்டன. அப்போது, டில்லியில், இந்தியாவிற்கான சீன தூதரை, ராகுல் ரகசியமாக சந்தித்தார். தற்போது, கல்வானில் நடந்த மோதலின் போதும், நாட்டை காங்கிரஸ் தவறாக வழிநடத்துகிறது.
கடந்த 2005 - 06 ம் ஆண்டில், சீனாவும் சீன தூதரகமும், ராஜிவ் அறக்கட்டளைக்கு 300 ஆயிரம் அமெரிக்க டாலர் நிதி வழங்கியுள்ளது. இது தான் காங்கிரஸ் மற்றும் சீனா இடையே ரகசிய ஒப்பந்தம். இவ்வாறு அவர் கூறினார்.


AthibAn Tv