கடந்த 24 மணி நேரத்தில் 13,586 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் மற்றும் 336 இறப்புகள் இந்தியா அதிகளவில் அதிகரித்துள்ளது. இப்போது மொத்தம் கொரோனா பாதிப்புகள் எண்ணிக்கை 3,80,532 ஆக உள்ளது, இதில் 1,63,248 செயலில் உள்ளது, 2,04,711 குணப்படுத்தப்பட்ட / வெளியேற்றப்பட்ட / குடியேறிய மற்றும் 12,573 இறப்புகள் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம்.
இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 13,586 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 80 ஆயிரத்து 532 ஆக அதிகரித்துள்ளது. அதில், ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 248 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 லட்சத்து 04 ஆயிரத்து 711 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 336 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 573 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், கடந்த 24 மணி நேரத்தில், 10,386 பேர் குணமடைந்தனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



AthibAn Tv