Type Here to Get Search Results !

இந்திய-சீன எல்லையில் ஆளில்லா ஹெலிகாப்டர்களை பயன்படுத்த சீனா திட்டம்

China`s high altitude unmanned helicopter drone for Tibet makes ...

இந்திய-சீன எல்லையில் ஆளில்லா சிறிய ரக ஹெலிகாப்டர்களை பயன்படுத்த சீனா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

திபெத் பீட பூமிப் பகுதியில் இந்திய சீன எல்லையில் இரு நாடுகளும் படையினரை குவித்து வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சீன அரசின் விமானத் தயாரிப்பு நிறுவனம் 'ஏஆர்-500சி' என்கிற ஆளில்லா சிறிய ரக ஹெலிகாப்டரை தயாரித்துள்ளது.

இவ்வகை ஹெலிகாப்டர்கள் உளவுக் கண்காணிப்பு, மின்னணு கருவிகளை செயலிழக்கச் செய்வது, குண்டு வீசி தாக்குதல் நடத்துவது ஆகிய திறன்களை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வகை ஹெலிகாப்டர்களை கடந்த வாரத்தில் சீனா சோதித்து பார்த்துள்ளது. இதையடுத்து இந்திய சீன எல்லைப் பகுதியில் இவ்வகை ஹெலிகாப்டர்களை சீனா பயன்படுத்த உள்ளதாக அந்நாட்டின் நாளேடுகளில் செய்தி வெளியாகி உள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.