Type Here to Get Search Results !

விவேகானந்தர் மண்டபத்தில் தியானத்துக்குப் பிறகு பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டார்

 பிரதமர் மோடியின் 45 மணி நேர தியானம் இன்று மதியம் நிறைவடைந்தது.

நாடாளுமன்ற தேர்தலுக்கான இறுதிகட்ட பிரசாரத்தை நேற்று முன்தினம் முடித்துக் கொண்டு பிரதமர் மோடி கன்யாகுமரி வந்தார். மாலையில் பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, விவேகானந்தர் மண்டபத்தில் தியானத்தைத் தொடங்கிய அவர், காலை 5.30 மணி வரை மொத்தம் 11 மணி நேரம் தியானத்தில் இருந்தார்.

தியானத்தின் போது அவர் காவி வேஷ்டி, காவி சட்டை மற்றும் காவி துண்டுக்கு மாறினார். அவர் நெற்றியில் திருநீற்றுப் பட்டையுடன் சந்தனம் மற்றும் குங்குமம் அணிந்துள்ளார். கையில் ருத்ராட்ச மாலையுடன் தியானம் செய்து வேத மந்திரங்களை உச்சரித்து கண்களை மூடினார். ஓம் என்ற சத்தம் கூடத்தில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது.

பிரதமர் மோடி நேற்று காலை 5.30 மணிக்கு தியானம் முடித்து வெளியே வந்தார். 5.55க்கு விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து சூரிய உதயத்தைக் கண்டார். பிறகு சூரியனை வணங்கிவிட்டு மீண்டும் மண்டபத்திற்குள் வலம் வந்தார். அப்போது ஸ்ரீ பாதம் மண்டபம் மற்றும் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் சிறிது நேரம் அமர்ந்து கண்களை மூடி தியானம் செய்தார். பிரதமர் மோடி தொடர்ந்து 3வது நாளாக இன்று தியானத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில் இன்று பிற்பகல் 3 நாள் தியானத்தை பிரதமர் நிறைவு செய்துள்ளார். இத்துடன் பிரதமரின் 45 மணி நேர தியானம் முடிவுக்கு வந்துள்ளது. தியானத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி மண்டபத்தை விட்டு வெளியே வந்தார். அதன்பின் விவேகானந்தர் மண்டபத்தில் பணிபுரியும் ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இதையடுத்து படகு மூலம் திருவள்ளுவர் சிலைக்கு வந்தார். திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து டெல்லி செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.