Type Here to Get Search Results !

பெரும்பான்மை இலக்கை தாண்டி முன்னிலையில் ஒடிசாவில் பாஜக ஆட்சியைப் பிடித்தது

 24 ஆண்டுகளுக்கும் மேலாக ஒடிசாவில் முதல்வராக இருந்த நவீன் பட்நாயக், தனது கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடந்தது. அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களின் வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் ஆந்திரா, ஒடிசா சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இதில் ஆந்திராவில் ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி பெரும்பான்மையை கடந்து அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளதால், அந்த கட்சி ஆட்சியை பிடிப்பது உறுதி.

இதேபோல் ஒடிசாவிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. 147 தொகுதிகளைக் கொண்ட ஒடிசாவில் ஆட்சி அமைக்க 74 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இன்று பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஆளும் பிஜு ஜனதா தளம் ஆரம்பம் முதலே பின்தங்கி இருந்தது. 24 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வராக இருந்த நவீன் பட்நாயக், தனது கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால், அவரது கணிப்பை பாஜக நிராகரித்தது. அழித்து முன்னேறியது.

மதியம் 12 மணி நிலவரப்படி, பாஜக 78 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையை கடந்தது. பிஜு ஜனதா தளம் 54 இடங்களில் முன்னிலை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. காங்கிரஸ் 11 இடங்களிலும், கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும் முன்னணியில் உள்ளன. இரண்டு தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்கள் முன்னிலை வகித்தனர். அடுத்தடுத்த சுற்றுகள் எண்ணப்படும் நிலையில், பாஜகவின் வெற்றி உறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஒடிசாவில் முதல்முறையாக பாஜக ஆட்சியமைக்க உள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.