Type Here to Get Search Results !

நேபாள போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்தியர் ஒருவர் பலி

latest tamil news

இந்தியா உடனான எல்லை பிரச்னைக்கு மத்தியில் ,நேபாள போலீசார் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்தியர் ஒருவர் பலியானதை அடுத்து எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்திய - நேபாள எல்லையருகே பீஹார் மாநிலம் சீதாமர்கி அருகே நேபாள போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் திகேஷ் குமார் (25) என்பவர் உயிரிழந்தார். மேலும் கை, கால்களில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து காயமடைந்த உமேஷ் ராம், உதய் தாக்கூர் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரு இந்தியரை நேபாள போலீசார் கைது செய்துள்ளனர். 'இந்தியர் ஒருவர் நேபாள பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை விடுதலை செய்வது தொடர்பாக அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் 'என துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து டி.ஜி எஸ்.எஸ்.பி குமார் ராஜேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச்சூட்டை தொடர்ந்து எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது எஸ்.எஸ்.பி மற்றும் லால்பண்டி உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நேபாள ராணுவம் நாராயண்பூர் எல்லையில் முகாமிட்டுள்ளது.

மற்றொருவர் கூறுகையில், சத்ருகன் ராய் என்பவர் நேபாளத்தின் எல்லை கிராமத்தில் அமைந்துள்ள அவரது மாமியார் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இன்று காலை எல்லையில் உள்ள நேபாள போலீசாருடன் வாக்குவாதம் செய்துள்ளார். அவரை நேபாள போலீசார் அடித்து உதைத்துள்ளனர். தொடர்ந்து அருகில் உள்ள கிராமத்தினர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர். இதனையடுத்து நேபாள போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. 17 முறை நேபாள போலீசார் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.

புதிய வரைபட மசோதா நாளை ஓட்டெடுப்பு

இந்திய-நேபாள எல்லையில் அமைந்துள்ள லிம்பியதுரா, காலாபாணி, லிபுலேக் ஆகிய பகுதிகளுக்கு நேபாளம் சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த பகுதிகள், உத்தரகண்ட் மாநிலத்தின் ஒருங்கிணைந்த பகுதிகள் என இந்தியா அறிவித்துள்ளது. இதனிடையே இந்த மூன்று பகுதிகளையும் சேர்ந்து நாட்டின் புதிய வரைபடத்தை தயார் செய்து நேபாளம் வெளியிட்டது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும், புதிய வரைபடம் தொடர்பான அரசமைப்பு சட்டத்திருத்த மசோதா நேபாள நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நாளை நடக்கும் நாடாளுமன்ற சிறப்பு அமர்வில், புதிய வரைபடம் தொடர்பான ஓட்டெடுப்பு நடத்தி மசோதா நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.