Type Here to Get Search Results !

எல்லைப்பிரச்னையில் பிரதமரின் முடிவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அனைத்து கட்சி தலைவர்கள்

latest tamil news

லடாக் பகுதியில் சீனாஉடனான எல்லைப்பிரச்னையில் பிரதமரின் முடிவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அனைத்து கட்சி தலைவர்கள் கூறினார்.

கடந்த சில மாதங்களாக இந்திய எல்லைப்பகுதியான லடாக்கில் இந்தியா சீனா படைகளை குவித்து வந்தது. இதனிடேயே கடந்த 15 ம் தேதி இரு நாட்டு வீரர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்தியதரப்பில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் பாதிப்பு குறித்து தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை,

இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து விவாதம் நடதத் வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து பிரதமர் மோடி இன்று 19 ம்தேதி )அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவித்தார்.

அதன்படி நடைபெற்ற கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எதிர்கட்சி தலைவர் சோனியா, தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார், மே.வங்க முதல்வர் மம்தாபானர்ஜி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி, தமிழகத்தில் தி.மு.க.,தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட அனைத்து கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டதில் மறைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில்அனைத்து தலைவர்களும் எழுந்து நின்று இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தினர். மேலும் சிக்கிம் கிராந்திகரி மோர்ச்சா தலைவரும் மாநில முதல்வருமான பிரேம் சிங் தமாங் "பிரதமர் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. என கூறினார்.

லடாக் பிரச்னையில் பிரதமர் மோடியின் முடிவுக்கு தமிழகம் துணை நிற்கும் : தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம்.

திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகையில் தேச பக்தி என்று வரும் போது நாங்கள் அனைவரும் ஒன்று பட்டுள்ளோம் என கூறினார். முன்னதாக பிரதமரின் இந்தியா சீனா பிரச்னை தொடர்பான அறிக்கையை வரவேற்றுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.