Type Here to Get Search Results !

ஒவ்வொரு இந்திய வீரரின் வீரமரணத்திற்கும் 3 எதிரிகள் கொல்லப்பட வேண்டும் என்று பஞ்சாப் முதல்வர் ஆவேசம்

Coronavirus will lead to economic slowdown: Punjab CM ...

ஒவ்வொரு இந்திய வீரரின் வீரமரணத்திற்கும் 3 எதிரிகள் கொல்லப்பட வேண்டும் என்று பஞ்சாப் முதல்வர் அம்ரேந்தர் சிங் ஆவேசமாக அறிவித்துள்ளார்.

சீனா இந்தியா இடையே எல்லை பகுதியில் பதற்றமான சூழ்நிலை தொடர்கிறது. கடந்த திங்கள் இரவு நடந்த மோதலில் நம் வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.

இந்நிலையில் கல்வான் பகுதியில் இந்திய சீன ராணுவத்தினர் இடையே நடந்த மோதல் தொடர்பாக பேசிய பஞ்சாப் முதல்வர், 'ஒவ்வொரு இந்திய வீரரின் வீரமரணத்திற்கு பதிலடியாக 3 எதிரிகள் கொல்லப்பட வேண்டும் என்றார். நான் அரசியல்வாதியாக பேசவில்லை. நானும் ராணுவத்தில் இருந்தவன். ராணுவத்தினர் மீது அன்பு கொண்டவன் என்ற விதத்தில் நம் வீரர்கள் மீதான தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும். இந்த கொடூரமான தாக்குதலுக்கு அரசிடம் தக்க பதிலை ஒட்டு மொத்த தேசமும் எதிர்பார்க்கிறது.' இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.