Type Here to Get Search Results !

லடாக்கின் கல்வான் பகுதியில் இருந்து சீன படைகள் பின் வாங்கிச் சென்றது

கல்வான் பள்ளத்தாக்கில் மோதலின்போது ...

லடாக்கின் கல்வான் பகுதியில் இருந்து சீன படைகள் பின் வாங்கிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 15 ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். பலர் காயமடைந்துள்ளனர். சீன தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அந்நாடு இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இதனால், எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. இதனை குறைப்பதற்காக இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கல்வான் பகுதியில் சீன ராணுவம் பின் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 22ம் தேதி நடந்த பேச்சுவார்த்தையின் போது, கல்வான் பகுதியில் இருந்து தங்கள் வீரர்கள் பின்வாங்கி செல்வார்கள் என சீன ராணுவம் தெரிவித்ததாகவும், அதன்படி சில வீரர்கள் மற்றும் வாகனங்கள் அங்கிருந்து சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.