Type Here to Get Search Results !

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த இரண்டு ...

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை மைய இயக்குனர் புவியரசன் அளித்த பேட்டி: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தென்மேற்கு பருவ காற்று மற்றும் வெப்பச் சலனத்தினால் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அத்துடன் தேசி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்றும், நாளையும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை வானம் மேககூட்டத்துடன் காணப்படும்.

கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு, குஜராத்தில் அரபிக் கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீசுவதால் மீனவர்கள் ஜூன் 29ம் தேதி வரை அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.