Type Here to Get Search Results !

''இந்தியா-சீனா இடையிலான கருத்து வேறுபாடுகளுக்கு, இரு தரப்பு பேச்சு மூலம் தீர்வு காணலாம்,'' சீன துாதர்

கொரோனா வைரஸ் தோன்றியது பற்றி சீனா ...

 ''இந்தியா-சீனா இடையிலான கருத்து வேறுபாடுகளுக்கு, இரு தரப்பு பேச்சு மூலம் தீர்வு காணலாம்,'' என, சீன துாதர், சன் வெய்டன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, பி.டி.ஐ., செய்தி நிறுவனத்திற்கு, அவர் அளித்த பேட்டி: கிழக்கு லடாக் பிரச்னை தொடர்பாக எழுந்துள்ள வேறுபாடுகளை சமாளித்து, தீர்வு காணும் ஆற்றல், இந்தியாவுக்கும், சீனாவுக்கும் உள்ளது. இந்தியாதான், ஒப்பந்தத்தை மீறி, உண்மையான எல்லைக் கோட்டை தாண்டி, சீன ராணுவத்தினரை தாக்கியது.

இதையடுத்து நடந்த மோதலில், 20 ராணுவ வீரர்கள் இறந்தனர். அதன் பின், சீனா திட்டமிட்டு, தாக்குதல் நடத்தியதாக, இந்தியா குற்றஞ்சாட்டியது. மேலும், இந்தியா அமைதியை விரும்புவதாகவும், அதை மீறுவோருக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் எனவும், எச்சரித்துள்ளது. அதனால், லடாக்கில் பதற்றத்தை குறைப்பது இந்தியாவின் கையில் தான் உள்ளது. எல்லைப் பிரச்னையை சுமூகமாக தீர்க்க, சீனா தயாராக உள்ளது. ஆனால், இந்தியா, சந்தேக கண்ணோடு, மோதல் போக்கை தேர்ந்தெடுத்தால், அது இரு நாட்டு மக்களின் அடிப்படை அபிலாஷைகளுக்கு எதிராக மாறி, தவறான பாதைக்கு வழி காட்டி விடும்.

இரு நாட்டு தலைவர்களின் வழிகாட்டுதல்படி, எல்லை பகுதியில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிரந்தரமாக ஏற்படுத்த, இந்தியாவுடன் இணைந்து செயல்பட, சீனா எப்போதும் தயாராக உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

இந்தியா மறுப்பு

இதற்கிடையே, சீன துாதரின் குற்றச்சாட்டை, மத்திய வெளியுறவு விவகாரங்கள் அமைச்சகம் மறுத்துள்ளது. இது தொடர்பாக, அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர், அனுராக் ஸ்ரீவத்சவா, செய்தியாளர்களிடம் பேசியதாவது: சீனா, ஏற்கனவே ஒப்புக் கொண்டதற்கு மாறாக, உண்மையான எல்லை கோட்டை தாண்டி,லடாக்கில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் முகாம்களை அமைத்தது. இதை, கடந்த, 15ம் தேதி இந்திய ராணுவத்தினர் தட்டிக் கேட்ட போதுதான் இரு தரப்பிலும் மோதல் ஏற்பட்டது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.