Type Here to Get Search Results !

சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள பணத்தின் அளவு 6 சதவீதம் குறைந்துள்ளது

Swiss banks hand over information of Indian account holders » Sirf ...

சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள பணத்தின் அளவு 6 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகள் கறுப்பு பணத்தை பதுக்கி வைப்பவர்களின் சொர்க்கமாக திகழ்கின்றன. நம் நாட்டில் முறைகேடான வழிகளில் பணம் ஈட்டியவர்கள் அதற்கு வரி செலுத்தாமல் ஏமாற்றுவதற்காக சுவிட்சர்லாந்து வங்கிகளில் பணத்தை பதுக்கி வைக்கும் நடைமுறை நீண்ட காலமாக உள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான தே.ஜ. கூட்டணி அரசு பதவியேற்றதும் இதற்கு தீர்வு காண முடிவு செய்யப்பட்டது. சுவிட்சர்லாந்து நாட்டுன் செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் அங்கு பணத்தை பதுக்கி வைத்துள்ளவர்களின் விபரத்தை தெரிவிக்க அந்த அரசு சம்மதித்தது.
இந்த நடவடிக்கை காரணமாக சுவிஸ் வங்கிகளில் பணத்தை பதுக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதுடன் பதுக்கும் பணத்தின் அளவும் குறைந்தள்ளது.
இந்நிலையில் இந்தியர்களால் சுவிஸ் வங்கிகளில் டிபாசிட் செய்யப்பட்ட பணம் பற்றிய விபரத்தை சுவிஸ் மத்திய வங்கி நம் அரசுக்கு தெரிவித்துள்ளது.
இதன்படி கடந்தாண்டை விட இந்தாண்டு சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள பணத்தின் அளவு 6 சதவீதம் குறைந்துள்ளது. தற்போது ஒட்டு மொத்தமாக சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் 6625 கோடி ரூபாய் 'டிபாசிட்' செய்யப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.