Type Here to Get Search Results !

சீனா-இந்தியா இடையே உள்ள எல்லைப் பிரச்சனைக்கு இருநாடுகளும் கலந்து பேசி சுமூக தீர்வு காணலாம்

British prime minister Boris Johnson will return to work on Monday ...

சீனா-இந்தியா இடையே உள்ள எல்லைப் பிரச்சனைக்கு இருநாடுகளும் கலந்து பேசி சுமூக தீர்வு காணவேண்டும் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கிளிக் டிமாண்ட் கேள்வி எழுப்பினார். அப்போது அதற்கு பதிலளித்த ஜான்சன் இவ்வாறு தெரிவித்துள்ளார். லடாக் பகுதியில் நிலவும் பதற்றம், மிகவும் வருந்தத்தக்க விஷயம் என கூறிய போரிஸ், பிரிட்டன், இந்திய-சீன எல்லையில் நடக்கும் போர் பதற்றத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்திய வெளியுறவுத்துறை சார்பில் அளிக்கப்பட்ட அறிக்கையில், இந்திய-சீன எல்லையில் போர்ப் பதற்றத்தைத் தவிர்க்க இந்தியா முறையான பேச்சுவார்த்தை நடத்திவருகிறது எனக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூன் 15 அன்று கல்வான் பகுதியில் நடந்த தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 40க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் மரணம் அடைந்தனர். முன்னதாக அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய-சீன எல்லைப் பிரச்னைக்கு தீர்வுக்கான கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் சீனாவை கடுமையாக சாடியிருந்தார். தற்போது இந்தியாவுக்கு ஆதரவாக பிரிட்டனும் சுமூக பேச்சுவார்த்தையை நடத்த கோரியுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.