குஜராத் மாநிலம் கிர் காடுகளில் வசிக்கும் சிங்கங்களின் எண்ணிக்கை 29 சதவீதம் அதிகரித்து 674 என்ற எண்ணிக்கையில் உள்ளதாக மாநில வனத்துறை தெரிவித்து உள்ளது
இது குறித்து வனத்துறை தெரிவித்து இருப்பதாவது: சிங்கங்களின் எண்ணிக்கை குறித்து ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம் இந்தாண்டு கடந்த மூன்று மாதங்களாக ஊடரங்கு பிறப்பிக்கப்பட்ட காரணத்தால் கணக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில்
கடந்த 5 மற்றும் 6-ம் தேதிகளில் கிர் காடுகளில் வசித்துவரும் சிங்கங்களின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 29 சதவீதம் அதிகரித்து 674 என்ற எண்ணிக்கையில் காணப்படுகிறது. இது கடந்த 2015ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பபை காட்டிலும் அதிகமாகும். அதே போல் 2010 ம் ஆண்டை ஒப்படும் போது 2015ம் ஆண்டில் சிங்கங்களின் எண்ணிக்கை 523 ஆக மட்டுமே இருந்தது.
மேலும் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல், சிடிவி தடுப்பூசி இறக்குமதி,வாழ்விடமேலாண்மை, இரை தேடும் பரப்பளவு அதிகரிப்பு, மனிதன்-சிங்கம் இடையேயான மோதல் குறைப்பு உள்ளிட்டவையே எண்ணிக்கை அதிகரிப்பு காரணம் ஆகும் என கூறினார்.
இதனிடையே சிங்கங்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது குறித்து பிரதமர் மோடி டுவிட்டர் மூலம் பாராட்டு தெரிவித்து உள்ளார். சிங்கங்களின் எண்ணிக்கை 29 சதவீதம் அதிகரித்து உள்ளது. குஜராத் மக்களுக்கும் இந்த முயற்சிக்கு வழி வகுத்த அனைவருக்கும் பெருமை .இந்த நேர்மையான போக்கு தொடர்கிறது என்று நம்புவதாக டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.Two very good news:— Narendra Modi (@narendramodi) June 10, 2020
Population of the majestic Asiatic Lion, living in Gujarat’s Gir Forest, is up by almost 29%.
Geographically, distribution area is up by 36%.
Kudos to the people of Gujarat and all those whose efforts have led to this excellent feat.https://t.co/vUKngxOCa7 pic.twitter.com/TEIT2424vF


AthibAn Tv