
சீனா கொண்டுவந்துள்ள தேசிய பாதுகாப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹாங்காங்கில் போராட்டம் நடந்தது. இதில், போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 1997ம் ஆண்டு முதல் சீனாவின் கட்டுப்பாட்டில் ஹாங்காங் உள்ளது. அங்கு சீனாவின் ஆதிக்கம், அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீன பார்லிமென்டில் கொண்டு வந்துள்ளது. இந்த மசோதாவுக்கு ஹாங்காங்கில் எதிர்ப்பு கிளம்பியது. இது தங்கள் பகுதி தன்னாட்சிக்கு எதிரானது என ஹாங்காங்கை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல இடங்களில் போராட்டம் நடந்தது. கவுஸ்பே மற்றும் வன் சாய் மாவட்டங்களில் மாணவர் அமைப்பு உள்ளிட்ட பல அமைப்புகளை சேர்ந்த ஆயிரகணக்கானோர் ஒன்று கூடினர். சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தினர். மாணவர்கள், மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஹாங்காங்கிற்கு ஆதரவாகவும் கோஷம் எழுப்பினர். ஒரு சிலர் ஹாங்காங்கிற்கு சுதந்திரம் கேட்டும் கோஷம் எழுப்பினர்.

அங்கு வந்த போலீசார் , போராட்டக்காரர்களை கலைந்து போக செய்யும்படி எச்சரிக்கை விடுத்தனர். ஆனால், போராட்டக்காரர்கள் மறுக்கவே, அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீயச்சி அடித்தும் விரட்ட முயற்சித்தனர். பெப்பர் பந்துகளை வீசவும் செய்தனர். ஒர சில இடங்களில் போராட்டக்காரர்களை கைது செய்தனர். தங்கள் மீது குடை மற்றும் தண்ணீர் பாட்டீல்களை வீசியதால், கண்ணீர் புகை குண்டுகளை வீசியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


AthibAn Tv