ஜூலை 1 முதல் ரயில் அடிப்படை கட்டணம் உயர்வு – மத்திய அரசு அறிவிப்பு
நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை, ஜூலை 1, 2025 முதல், பயணிகள் ரயில் சேவைகளின் அடிப்படை கட்டணங்களில் உயர்வு ஏற்படுகிறது.
இந்த கட்டண திருத்தம் குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது:
பயணிகள் வசதிகளை மேம்படுத்துவதும், நிதி ஆதரவை அதிகரிப்பதற்கும், ரயில்வே அமைச்சகம் கட்டணங்களில் சீரமைப்பை மேற்கொண்டுள்ளது. இந்த மாற்றம் ஜூலை 1, 2025 முதல் அமலுக்கு வருகிறது.
முக்கிய அம்சங்கள்:
- புறநகர் ரயில்களில் மற்றும் சீசன் டிக்கெட்டுகளில் (புறநகர் மற்றும் புறநகர் அல்லாத வழித்தடங்கள்) எந்த மாற்றமும் இல்லை.
- சாதாரண ஏசி அல்லாத வகுப்புகளுக்கு (புறநகர் அல்லாதவை):
- இரண்டாம் வகுப்பு – 1 கி.மீக்கு 0.5 பைசா அதிகரிப்பு (நிபந்தனை உடன்)
- 0–500 கி.மீ வரை – மாற்றமில்லை
- 501–1500 கி.மீ – ₹5 அதிகரிப்பு
- 1501–2500 கி.மீ – ₹10 அதிகரிப்பு
- 2501–3000 கி.மீ – ₹15 அதிகரிப்பு
- படுக்கை வசதி வகுப்பு – 1 கி.மீக்கு 0.5 பைசா அதிகரிப்பு
- முதல் வகுப்பு – 1 கி.மீக்கு 0.5 பைசா அதிகரிப்பு
- இரண்டாம் வகுப்பு – 1 கி.மீக்கு 0.5 பைசா அதிகரிப்பு (நிபந்தனை உடன்)
- மெயில் / எக்ஸ்பிரஸ் (ஏசி அல்லாத வகுப்புகள்):
- இரண்டாம் வகுப்பு, படுக்கை வசதி மற்றும் முதல் வகுப்பு – 1 கி.மீக்கு 1 பைசா உயர்வு
- ஏசி வகுப்புகள் (மெயில்/எக்ஸ்பிரஸ்):
- அனைத்து ஏசி வகுப்புகளுக்கும் 1 கி.மீக்கு 2 பைசா உயர்வு
தனிச்சிறப்பு ரயில்கள்:
ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ, வந்தே பாரத், தேஜஸ், ஹம்சஃபர், அமிர்த பாரத், மகாமனா, கதிமான், அந்தியோதயா, ஜன் சதாப்தி, யுவா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களுக்கு வகுப்பு அடிப்படையிலான திருத்தப்பட்ட கட்டணக் கட்டமைப்பு அமுலாகும்.
மாற்றமில்லாத கட்டணங்கள்:
- துணை கட்டணங்கள்
- முன்பதிவு கட்டணம்
- அதிவிரைவு கட்டணம்
- பிற கட்டணங்கள்
- ஜிஎஸ்டி வசூலும் மாற்றமின்றி தொடரும்
அமல்படுத்தல்:
ஜூலை 1, 2025 அல்லது அதன் பிந்தைய தேதிகளில் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு புதிய கட்டணங்கள் பொருந்தும். இதற்கு முந்தைய டிக்கெட்டுகள் பழைய கட்டணத்திலேயே செல்லுபடியாகும்.
அனைத்து மண்டல ரயில்வே அலுவலகங்களுக்கும் புதிய கட்டணத்தை செயல்படுத்த தேவையான வழிமுறைகள் அனுப்பப்பட்டுள்ளன. ரயில் நிலையங்களில் கட்டண அட்டவணை புதுப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

