இயற்கை பேரிடரின் போது இமாச்சல பிரதேசத்தை ராகுல் காந்தியும் அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் கவனிக்கவில்லை என பாஜக தேசிய தலைவர் ஜேபி.நட்டா குற்றம் சாட்டியுள்ளார்.

இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா நன்காரி பகுதியில் பிரச்சாரம் செய்த அவர், கடந்த ஆண்டு இமாச்சலப் பிரதேசம் இயற்கைப் பேரிடரை எதிர்கொண்டபோது மூன்று முறை சென்றதாகவும், மத்திய அரசு ரூ.3,200 கோடி நிவாரணம் வழங்கியதையும் நினைவு கூர்ந்தார்.
காங்கிரஸ் ஆளும் இமாச்சல பிரதேச மாநில அரசு நீண்ட காலம் நீடிக்காது என்று ஜே.பி. பேரிடர் காலத்தில் இங்கு வராத ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் இப்போது தேர்தல் பிரசாரத்துக்கு மட்டுமே வருகிறார்கள் என்று நட்டா குற்றம் சாட்டினார்.


AthibAn Tv